Bodhai Kaname Song Tamil Lyrics from Oh Manapenne
Name: Bodhai Kaname
Singers: Anirudh Ravichander, Shashaa Tirupati
Music: Vishal Chandrashekhar
Lyrics: Mohan Rajan, Vishal Chandrashekhar
அதோ பொன் பிறையா
உடைந்திடும் நுரையா
இதோ என் நொடியின் வழிப்பறியா
நாளும் கரையோடும் அலையோடும்
உறவாடும் கிளிஞ்சல் போல்
என் நெஞ்சம் நிலையின்றியா
அங்கே தொலை தூரத்தில் சாரல்
மழை கண்டேன் நான் பக்கம்
வரும்போது சிறை கம்பியா
தவறென பார்த்த கண் இன்று
கலை செய்யுதே
தரிசென பார்த்த மேகங்கள்
கடல் பெய்யுதே
கண்கள் காரணம் தேடுதே
உன்னை வந்து சேருதே
போதை கணமே கணமே
போகாதிரு நீ
போதை கணமே கணமே
போகாதிரு நீ
போதை கணமே கணமே
வாழ்வாய் இரு நீ
போதை கணமே சிறகாகிடு நீ
நிஜமே நிஜமே நீங்காதிரு நீ
தேனின் தினமே தினமே தேங்காதிரு நீ
நாளை இனிமேல் அனலாய் மேலே விழுந்தால்
போதை கணமே குடையாயிரு நீ
தொடாத பாதையோ
கை வீசும் ஆசையோ.....
நிறைவது என் ஓடையோ
நிகழ்வது யாரின் கதையோ
எனகென நீண்ட கிளையில்
குயில் சேருதோ......
மரகத பொன் வேலையோ
மனதினில் யாழின் மழையோ
இதமாய் என் காலையோ
கனாவின் ஓராமாக
இடாதா கோலமாக
மறைத்து வைத்த ஆசை
கை காட்டுதே .....
நெஞ்சோடு ஆழமாக
சொல்லாமல் நீளமாக
சுவைத்திருந்த மௌனம்
பொய் ஆகுதே......
இருவரி சேர்ந்து
காற்றோடு குரலாகுதே
இருபதைத்தாண்ட.....
எதுவோ என் விரலாகுதே
என்னத் தோராணம் ஏறுதே
சேரும் பாலம் போலவே........
போதை கணமே கணமே போகாதிரு நீ
போதை கணமே கணமே போகாதிரு நீ
போதை கணமே கணமே வாழ்வாய் இரு நீ
போதை கணமே சிறகாகிடு நீ.......
நிஜமே நிஜமே நீங்காதிரு நீ.......
தேனின் தினமே தினமே தேங்காதிரு நீ
நாளை இனிமேல் அனலாய் மேலே விழுந்தால்
போதை கணமே குடையாய் இரு நீ.....
தொடாத பாதையோ.......
கை வீசும் ஆசையோ.......
